இணுவிலான் சிகாகோ பாஸ்கர்

Chelvadurai Shanmugabaskaran

A Word From The Author

வணக்கம்.

ஈழத்தில் இருந்து எழுபதுகளில் அமெரிக்காவிற்கு குடியுரிமை பெற்று வந்தபோது, கையோடு கொண்டுவந்த தமிழையும் மண்ணின் கலை, கலாச்சாரங்களையும் ஈழத்தின் சிறப்போடு, சிகாகோ நகரில் பதியம் வைத்து வளர்த்த பெரியார்களோடு  இணைந்து செயலாற்றி, தமிழை வளர்த்ததோடு நானும் வளர்ந்த பெருமையோடு, இந்நூல்களை உங்கள் கைகளில் தவழ விடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். என் இதயத்தில் கசிந்து கணினி மூலமாகத் திரண்டு வந்துள்ள, இனித் தொடர்ந்து வரவுள்ள வரலாற்றுப் படைப்புகளும் நாளைய சந்ததிகளுக்குச் சென்றடைவதோடு, எனதிந்தப் படைப்புகள் ஒரு சிலரது இதயங்களில் சிந்தனையைத் தூண்டிவிடுமேயானால் அதுவே எனது படைப்பிற்குக்  கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்.

நன்றி.

நல்லதை நினைப்போம் 
நல்லதைச் செய்வோம்
நன்றாய் நாம் வாழ்வோம்                                                                            

Chicago Baskar
Entrepreneur, Writer and Speaker.

Video Interview

Toronto Review

thumbnail

Jaffna Review

What Readers Are Saying

See what the readers are saying about these books!

கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் தமிழரின் பழமையான வரலாற்றைப் புத்தகம் உயிருடன் எங்களின் கண்முன் கொண்டு வருகிறது. குமரிக்கண்டம் போன்ற தொன்மையான நிலப்பரப்புகள் பற்றிய அறிவும், பெருமையும் இதன் மூலம் மேலும் வலுப்பெறுகிறது.

கவிதாயினி அபி வர்ணா

Review on Book 1

இந்த வரலாற்று நாவல், எம்மண்ணின் வாசத்தையும் உணர்வையும் தூண்டும் விதமாக, எம் வரலாற்றை எம்முடன் வாழ வைக்கும் ஒரு பேரொளி எனும் பொக்கிஷமாக தோன்றுகிறது.
பாஸ்கரன் அண்ணாவின் இரண்டு வருட ஆராய்ச்சியும் தமிழ்மொழியின் உயிரோட்டமும் இணைந்து, இதனை உணர்வுப்பூர்வமாகவும் நாட்டுப்புற மொழிச் செறிவுடனும் நிகழ்த்தியிருப்பது பிரமிப்பூட்டுகிறது.

லிங்கேஸ்வரன்,ஜேர்மனி

Review on Book 2