Review 1

இணையிலான் மீதான எனது பார்வை
…………………………………………..

கடலுக்கு அடியில் மூழ்கிப்போன இருபதாயிரம் கால தமிழர் வரலாறு சத்தம் இன்றி உறங்கிக் கொண்டிருக்கிறது.

நாவலன் தீவு என அழைக்கப்பட்ட குமரிப்பெருங்கண்டம் பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்த கண்டமென நான் அறிந்திருக்கின்றேன்.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மாபெரும் தமிழ் கண்டம் வரலாற்றில் அதுவாகத்தான் இருக்கும் என்றும். இன்று தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகஸ்கார் ,தென்னாபிரிக்கா,இலங்கை ,
மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு சிறு தீவுகளை இணைத்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் குமரிக்கண்டம் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

இது நான் எப்படி அறிந்தேன் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் ஊடாகத்தான் அறிய கிடைத்திருக்கின்றது. தமிழருடைய வரலாறு மிகப் பழமை வாய்ந்தது என்று என் முன்னோர்களும் சரி இன்று எம்மோடு இருப்பவர்களும் சரி சொல்கிறார்கள்,நம்புகிறார்கள். அப்படி அவர்கள் சொல்கின்ற போதும் நம்புகின்ற போதும் மெய்சிலிர்க்கவே எம்மை வைக்கின்றது. அப்படி மெய்சிலிர்க்க வைக்கும் படைப்புக்களில் இணையிலானும் ஒன்று. என் கண்முன்னே

எனது வயதை பொருத்தவரை நான் வரலாற்றை மூன்று வகையாக தான் பிரித்துப் பார்க்கின்றேன்

1.பாடசாலையில் கற்பிக்கப்பட்ட வரலாறு 2போருக்கு முந்திய வரலாறு
3.போருக்கு பிந்திய வரலாறு

அந்த வகையில் பாடசாலையில் கற்பிக்கப்பட்ட வரலாறு உடன்தான் இணையிலானை நான் பார்க்க முடிகிறது. அரசர்களின் ஆட்சிகளும் வெள்ளையர்களின் ஆட்சிகளும் பாடசாலை கல்வி வரலாற்றையே நினைவுபடுத்துகின்றது.

ஆனால் இணையிலானின் பரந்து விரித்து இருக்கின்ற அடிமை விலங்கு உடைக்கின்ற தன்மை இன்றைய கால ஓட்டத்தில் பேசப்பட வேண்டியதும் எம்போன்றவர்களுக்கு ஆவணப்படுத்த வேண்டியதுமான வரலாறு என்பதில் எந்த ஐயமும் இல்லை.

 இன்றைய காலகட்டத்தில் முகநூல்களும் youtube whatsapp மற்றும் செய்தி இணையங்கள் என மிக விரைவாக பரவிக் கொண்டிருக்கின்ற தகவல்கள் வரலாற்றை திரும்பிப் பார்க்காத ஒன்றாகவே இருக்கின்றது. அந்த ஓட்டத்தில் இணையிலான் ஏதோ ஒரு வகையில் மனதிற்கு திருப்திகரமாக அமைந்து விடுகிறது.

இணையிலான் இன்றைய கால தேவையை உணர வைத்துள்ளதுடன் ஆசிரியரின் தேடலும் ஆசிரியரின் பக்குவ நிலையும்  எம்மை தன்னுடன் இணைத்துக் கொண்டே பயணிக்கின்றது.

ஈழப்போரை சிறுவயதில் அறிந்தவர்களாக வும் தெரிந்தவர்களாகவும் அவ்வடுகளை இன்னும் அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களாகவும் இருக்கின்ற எம்போன்றவர்களுக்கு வரலாற்று தகவல்கள் பொக்கிஷங்கள்.

ஈழப்போர் நடந்த காலகட்டங்களில் நம்மவர்கள்  படைப்புக்கள் மட்டுமே தணிக்கை செய்யப்பட்டு நூலகங்கள் மற்றும் புத்தகக் கடைகளுக்கும் வாசிப்பு சார்ந்த இடங்களுக்கும் வழங்கப்பட்டதை நாம் அறிவோம்.மேற்கத்திய படைப்புகள் சில வந்தாலும் அதுவும் தணிக்கை செய்யப்பட்டு இருந்தது.

போருக்கு பின்னரான காலப்பகுதியில் அதாவது இன்றைய காலப்பகுதியில் மேற்கத்திய படைப்புக்களின் ஆதிக்கமும் அதன் மீதான ஈடுபாட்டு தன்மையும் வாசகர்களிடையே ஆழ்ந்து உள்ளது என்பது உண்மைதான்.
ஒவ்வொரு நாட்டு கலாச்சாரம் மற்றும் மொழிகளினதும் வரலாற்றை நாம் இலகு முறையில் அறியக்கூடியதாக இருந்தலும். அப்படி அறிந்த தகவல்கள் எம்மவர் படைப்புகள் மீது மேதாவித்தனமான புறக்கணிப்பை சுட்டிக்காட்டி நிற்பதும் எமது இலக்கியப் பயணத்தில் ஓர் சாவக்கேடை தந்து உள்ளது.

பாஸ்கர் ஐயாவை பொறுத்தவரை எதை தர நினைத்தாரோ அதை தந்து விட்டார். அவர் கடமையை சிறப்பாக செய்துவிட்டார்.இனி நாம் தான் இந்த பொக்கிஷத்தை எதிர்கால சந்ததியினருக்கு கைமாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கின்றோம்.

எனது வயதை பொருத்தவரை வாசிப்பின் அனுபவத்தை பொறுத்தவரை இணையிலான் மீதான என் உரையும் நாவல் மீதான பார்வையும் சரியோ தவறோ என புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் எமது வயதை ஒத்தவர்களுக்கு எதிர்கால சந்ததிற்கும் இணையிலானை கொண்டு செல்ல வேண்டிய தலையாயக் கடமையை நான் உணர்கிறேன்.

மண்ணின் வரலாறு தன் சொல்லின் வரலாறும் தெரியாத ஒருவர்  மனிதனாக இருக்க முடியாது என்ற எனது எண்ணக் கோட்பாடுகளுக்கு இணையிலான்  போன்ற நாவல்கள் மற்றும் அதை ஒத்த சிறுகதைகளாகட்டும், கவிதைகள் கட்டுரைகள், ஆய்வுகள் எல்லாம் ஒரு தவத்தின் வரமாகவே கருதுகிறேன்.

இந்த இடத்தில் இணையிலான் ஆசிரியருக்கு ஒரு பெண் தளபதியாக தலை நிமிர்ந்து ஒரு சலூட். எனது பார்வை இணையிலானை முற்று முழுதாக உங்கள் முன் ஒப்பிவிற்பது அல்ல
இன்றைய வரலாற்றின் மீதான வாசிப்பையும் தேவையும் சுட்டிக்காட்டி செல்வதில் கடமை இருக்கிறது .

அண்மைக்காலமாக தமிழர்கள் வரலாற்று இடங்கள் மீதான திணிப்புகளும்
ஆளும் தரப்பினருக்கு சார்பான சட்டங்களும் நடந்தேறுவதை
நாம் கண்கூடாகவே பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அதில் என்ன கவலை என்றால் ஏதோ ஒரு தேவைக்காக எம்மவர்களே எமது வரலாற்று எதிர்ப்பாகவும் திணிக்கப்படும் வரலாறு வரலாற்றுக்கு ஆதரவாகவும் இருக்கிறார்கள்.
நாங்கள் பஸ்ஸிலே பயணிக்கும் போது ஜன்னல் ஊடாக பார்த்த பார்க்கின்ற எத்தனையோ இடங்கள் திணிப்புக்கு உள்ளாகி எங்களாலும் அழிக்கப்பட்டு மறைக்கப்பட்டு வருகின்றது.

அரசியல் இதில் எவ்வகையில் தனது இருப்பை காட்டுகிறது என்பது கேள்விக்குறியே இருப்பை மட்டுமல்ல எதிர்ப்பை காட்டுகிறது என்பதும் கேள்விக்குறியே.

மண்ணின் வரலாறும் தன் சொல்லின் வரலாறும் தெரியாத ஒருவர் மனிதராக இருக்க முடியாது என்ற எனது கோட்பாட்டை மீண்டும் வலியுறுத்தியவளாக இணையிலானை மீண்டும் வரவேற்றவளாக ஓர் சலூட் செய்கிறேன் ஒரு பெண் தளபதியாக உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.

கவிதாயினி அபி வர்ணா
முல்லைத்தீவு 

Leave a Comment